பதவி நீட்டிப்பு வேண்டாம் மத்திய அரசுக்கு அட்டார்னி ஜெனரல் கடிதம்


பதவி நீட்டிப்பு வேண்டாம் மத்திய அரசுக்கு அட்டார்னி ஜெனரல் கடிதம்
x
தினத்தந்தி 11 Jun 2017 10:30 PM GMT (Updated: 11 Jun 2017 10:52 PM GMT)

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பொறுப்புக்கு வந்த உடன் 2014–ம் ஆண்டு மே மாதம் நாட்டின்

புதுடெல்லி,

மிக உயர்ந்த சட்ட அதிகாரி பதவியான அட்டார்னி ஜெனரலாக நியமிக்கப்பட்டவர் முகுல் ரோஹத்கி. கடந்த 3 ஆண்டுகளில் உயர் நீதிபதிகள் நியமன பிரச்சினை, முத்தலாக் பிரச்சினை உள்பட பல்வேறு சிக்கலான வழக்குகளில் இவர் சுப்ரீம் கோர்ட்டுக்கு உதவி புரிந்துள்ளார். இந்த மாத தொடக்கத்தில் மத்திய மந்திரி சபையின் நியமனக்குழு அடுத்த உத்தரவு வரும்வரை அவரது பதவிக்காலத்தை நீட்டிப்பதாக அறிவித்தது.

ஆனால் முகுல் ரோஹத்கி தனக்கு பதவி நீட்டிப்பு வேண்டாம் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், இந்த பதவிக்காக நான் மறுநியமனம் செய்யப்படுவதை விரும்பவில்லை. 3 ஆண்டுகள் பணிபுரிந்ததே எனக்கு போதும். நான் வக்கீல் பணிக்கு திரும்பவே விரும்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளதாக அவர் கூறினார்.


Next Story