தேசிய செய்திகள்

மிகச்சிறந்த ஜனாதிபதியாக ராம்நாத்கோவிந்த் விளங்குவார் என நம்புகிறேன்: பிரதமர் மோடி + "||" + I am sure Shri Ram Nath Kovind will make an exceptional President: PM

மிகச்சிறந்த ஜனாதிபதியாக ராம்நாத்கோவிந்த் விளங்குவார் என நம்புகிறேன்: பிரதமர் மோடி

மிகச்சிறந்த ஜனாதிபதியாக ராம்நாத்கோவிந்த் விளங்குவார் என நம்புகிறேன்: பிரதமர் மோடி
மிகச்சிறந்த ஜனாதிபதியாக ராம்நாத்கோவிந்த் விளங்குவார் என நம்புகிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

ஜூலை மாதத்துடன் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து ஜனாதிபதி  தேர்தல் ஜூலை 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுக்கள் 14 ஆம் தேதி முதல் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து,  பாரதீய ஜனதா கட்சி ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்வதில் தீவிரம் காட்டி வந்தது.  இன்று அக்கட்சியின் ஆட்சி மன்றக்குழு டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாய கூட்டணி கட்சியின் சார்பில், பீகார் கவர்னராக பதவி வகிக்கும் ராம்நாத்கோவிந்த்  ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராம்நாத்கோவிந்த், மிகச்சிறந்த ஜனாதிபதியாக  விளங்குவார் என்ற உறுதியளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி மேலும் கூறுகையில், “ ராம்நாத்கோவிந்த் விவசாயிகளின் மகனாக ஏழைகளுக்காக குரல் கொடுப்பார். ஏழை எளிய மக்களுக்காக தன்னை அர்ப்பணித்தவர் ராம்நாத்கோவிந்த். மிகச்சிறந்த ஜனாதிபதியாக ராம்நாத்கோவிந்த் விளங்குவார் என உறுதியளிக்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.