மராட்டிய விவசாயிகள் போராட்டத்தால் தானே-பத்லாபூர் சாலைமறியல்,வன்முறையாக மாறியது


மராட்டிய விவசாயிகள் போராட்டத்தால் தானே-பத்லாபூர் சாலைமறியல்,வன்முறையாக மாறியது
x
தினத்தந்தி 22 Jun 2017 10:42 AM GMT (Updated: 22 Jun 2017 10:42 AM GMT)

மராட்டிய மாநிலத்தில் கடந்த சில நாட்களாக விவசாய கடன் தள்ளுபடி கூறித்த போராட்டங்கள் நடைபெற்று வந்தன. அதை தொடர்ந்து விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக அம்மாநில முதல்வர் அறிவித்தார்.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில்  விவசாய நிலங்கள் பாதுகாப்பு அமைச்சகத்தால் கையகபடுத்தபட்டு உள்ளது. அந்த இடங்களில் இந்திய கடற்படை கட்டிடம் கட்டப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்  மறுபடியும் விவசாயிகள் போராட்டத்தில் இடுபட்டுள்ளனர். தானே-பத்லாபூர் இடையேயான நெடுஞ்சாலையை மறித்து போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது அங்கு இருந்த வாகனங்களையும் தீ வைத்து எரித்தனர். அதோடு அரசுக்கு எதிராக முழக்கங்களையும் எழுப்பினர்.

இப்போராட்டத்தில் 12 போலீசார், 12 விவசாயிகள் மற்றும்  இரண்டு பத்திரிக்கையாளர்கள் உட்பட 26 பேர் காயமடைந்துள்ளனர்.

போராட்டத்தை தடுக்க சுமார் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். விவசாயிகளின் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story