எதிர்க்கட்சிகள் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக மீராகுமார் அறிவிப்பு


எதிர்க்கட்சிகள் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக மீராகுமார் அறிவிப்பு
x
தினத்தந்தி 22 Jun 2017 12:21 PM GMT (Updated: 22 Jun 2017 12:22 PM GMT)

எதிர்க்கட்சிகள் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக மீராகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

புதுடெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 14 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.  எதிர்கட்சிகள் சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளராக  மக்களவை முன்னாள் சபாநாயகர் மீராகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பாஜக வேட்பாளர் ராம்நாத்தை எதிர்த்து மீராகுமார் போட்டியிடுகிறார். மக்களவை தலைவராக பொறுப்பு வகித்த முதல் பெண் மீராகுமார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருமுறை மத்திய மந்திரியாகவும், 5 முறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர் மீராகுமார். முன்னாள் துணை பிரதமர் பாபு ஜெகஜீவன் ராமின் மகள் மீராகுமார். 72 வயதாகும் மீரா குமார் பீகார் மாநிலம் பாட்னாவில் பிறந்தவர் ஆவார்.

Next Story