அனைத்து தகுதிகளும் உள்ளதாலேயே மீராகுமாரை தேர்வு செய்துள்ளோம் கனிமொழி எம்.பி.பேட்டி


அனைத்து தகுதிகளும் உள்ளதாலேயே மீராகுமாரை தேர்வு செய்துள்ளோம் கனிமொழி எம்.பி.பேட்டி
x
தினத்தந்தி 22 Jun 2017 2:02 PM GMT (Updated: 2017-06-22T19:32:05+05:30)

அனைத்து தகுதிகளும் உள்ளதாலேயே மீராகுமாரை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்துள்ளோம் என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் கனிமொழி செய்தியார்களிடம் கூறியதாவது:

அனைத்து தகுதிகளும் உள்ளதாலேயே மீராகுமாரை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்துள்ளோம். பாஜக தன்னிச்சையாக வேட்பாளரை நிறுத்தியுள்ளதால், எதிர்க்கட்சிகள் மீராகுமாரை வேட்பாளராக நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதிமுக இருஅணிகளும் பாஜகவிற்கு விசுவாசமாக இருக்க முயற்சிக்கிறார்களே தவிர, தமிழக மக்களுக்கு விசுவாசமாக இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story