தெலுங்கானா ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரம்


தெலுங்கானா ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 23 Jun 2017 9:08 AM GMT (Updated: 2017-06-23T14:38:33+05:30)

தெலுங்கானாவில் பெண் குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது.

தெலுங்கானா,

தெலுங்கானா மாநிலம் விகாரபாத் மாவட்டத்தில் உள்ள எக்கரெட்டிகுடா கிராமத்தில் 14 மாத பெண் குழந்தை விளையாடிக்கொண்டிருந்த போது 60 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது.

குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருந்த அக்கா இதை கண்டதும் அலறிஅடித்துக் கொண்டு பெற்றோரிடம் தெரிவித்தார். பின்னர் மீட்புக் குழுவினரிடம் தகவல் தெரிவிக்க்ப்பட்டது.

மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகள் கூறுகையில் "குழந்தையை காப்பாற்ற கிணற்றுக்கு அருகே ஒரு குழி தோண்டப்பட்டு உள்ளது, ஆனால் கடினமான பாறைகள் உள்ளதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மூச்சுதிணரல் ஏற்படாமல் இருக்க கிணற்றுக்குள் ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டுள்ளது, மேலும் குழந்தையின் நடவடிக்கையை கண்காணிக்க சிறிய கேமரா பொருத்தப்பட்டுள்ளது என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

குழந்தையை உயிருடன் மீட்க மீட்பு குழுவினர் தீவிர முயற்ச்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

Next Story