‘மீரா குமார் என்னை நடத்திய விதம் இப்படிதான்’ மக்களவை வீடியோவை டுவிட் செய்த சுஷ்மா


‘மீரா குமார் என்னை நடத்திய விதம் இப்படிதான்’ மக்களவை வீடியோவை டுவிட் செய்த சுஷ்மா
x
தினத்தந்தி 25 Jun 2017 11:46 AM GMT (Updated: 2017-06-25T17:16:29+05:30)

மீரா குமார் என்னை நடத்தி விதம் இப்படிதான் என மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் டுவிட்டரில் பழைய வீடியோவை டுவிட் செய்து உள்ளார்.


புதுடெல்லி,

ஜனாதிபதி தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராம்நாத் கோவிந்த், தனது வேட்புமனுவை தாக்கல் செய்து உள்ளார். காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் முன்னாள் மக்களவை சபாநாயகர் மீரா குமாரை வேட்பாளராக இறக்கி உள்ளது.

தலித் பிரிவை சேர்ந்த இருவர் போட்டி என செய்திகள் பரவி வரும் நிலையில் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் பழைய வீடியோ ஒன்றை டுவிட் செய்து உள்ளார். 

மக்களவை எதிர்க்கட்சி தலைவரை மீரா குமார் நடத்திய விதம் இதுதான் என பழைய வீடியோவை சுஷ்மா தன்னுடைய டுவிட்டரில் டுவிட் செய்து உள்ளார். சுஷ்மா அப்போது மக்களவை எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர். சுஷ்மாவின் 6 நிமிட பேச்சின் போது 60 முறை மீரா குமார் குறுக்கிட்டு தடையை ஏற்படுத்தி உள்ளார். சுஷ்மா சுவராஜ் டுவிட் செய்து உள்ள வீடியோவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியை சரமாரியாக விமர்சனம் செய்கிறார். நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் ஊழல் நிறைந்த அரசு என விமர்சனம் செய்கிறார், பா.ஜனதா உறுப்பினர்கள் எல்லோரும் அதனை பாராட்டுகின்றனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மகிழ்ச்சியற்ற நிலையையும் காட்டுகிறது.

Next Story