கோவிந்த்தை ஆதரிப்பதன் மூலம் தன் தவறை நிதிஷ் திருத்திகொள்கிறார்- சுஷில் மோடி


கோவிந்த்தை ஆதரிப்பதன் மூலம் தன் தவறை நிதிஷ் திருத்திகொள்கிறார்- சுஷில் மோடி
x
தினத்தந்தி 25 Jun 2017 7:59 PM GMT (Updated: 2017-06-26T01:29:06+05:30)

முன்னாள் பிகார் துணை முதல்வர் சுஷில் மோடி நிதிஷ் குமார் தே.ஜ.கூவின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்தை ஆதரிப்பதன் மூலம் தவறுகளை திருத்திக்கொள்கிறார் என்றார்.

பட்னா

லாலு பிரசாத் யாதவ் கோவிந்த்தை ஆதரித்ததன் மூலம் நிதிஷ் வரலற்றுத் தவறு புரிந்திருப்பதாக கூறியதற்கு எதிராக சுஷில் இவ்வாறு கூறியுள்ளார்.

நிதிஷ், லாலுவின் வேண்டுகோளை நிராகரித்து கோவிந்த்திற்கான ஆதரவு உறுதி எனத் தெரிவித்தார். 

நெருக்கடி நிலையைக் கொண்டு வந்த காங்கிரஸ் கட்சியை நிதிஷ் போன்ற சோஷலிஸ்டுகள் ஆதரிக்கக்கூடாது என்றார் சுஷில். ராம் மனோகர் லோகியா போன்ற சோஷலிசத் தலைவர்கள் வாழ்நாள் முழுதும் காங்கிரஸ்சை ஆதரித்து வந்தனர். அவர்களது சீடர்களான நிதிஷ் போன்றோர் காங்கிரஸ்சுடன் இணைவது வரலாற்றுத் தவறு என்றார் சுஷில். இன்னும் சொல்லப்போனால் மீரா குமாரின் தந்தை ஜெகவீவன் ராம் போன்றோர் காங்கிரஸ்சிலிருந்து வெளியேறினர். பாரதிய ஜனதா கட்சி ஜன சங்கமாக இருந்த போது ஜனதா அரசில் பங்கு கொண்டிருந்தது. அந்த அரசுதான் ஜெகஜீவன் ராமை துணைப் பிரதமராக ஆக்கியது என்றும் சுஷில் சுட்டிக்காட்டினார். 

தேஜஸ்வி வேண்டுகோள்

ரா.ஜ.த மற்றும் ஐக்கிய ஜனதா தளத் தலைவர்கள் கட்டுப்பாடின்றி அறிக்கைகளை விடுவதை நிறுத்தி பொறுமையை கடைபிடிக்க வேண்டும் என்று துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கேட்டுக்கொண்டார். நிதிஷ் தே.ஜ.கூ வேட்பாளர் கோவிந்த்திற்கு குடியரசுத் தேர்தலில் ஆதரவு தெரிவித்ததிலிருந்து இரு கட்சித் தலைவர்களும் கடும் விமர்சனங்களுடன் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். லாலு கட்சியின் முக்கியத் தலைவரான ரகுவன்ஷ் பிரசாத் சிங் என்பவர் பாஜகவை கட்டுப்படுத்தி வைக்கவே ஐக்கிய ஜனதா தளத்தை பொறுத்துக்கொண்டிருப்பதாக தெரிவித்திருந்தார். இதற்கு ஆட்சேபனை தெரிவித்த ஐக்கிய ஜனதா தளம் இத்தகையத் தலைவர்களை லாலு அடக்கி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.


Next Story