ரம்ஜான் கொண்டாட்டம்: டார்ஜிலிங் போராட்டம் 12 மணி நேரம் ஒத்திவைப்பு


ரம்ஜான் கொண்டாட்டம்: டார்ஜிலிங் போராட்டம் 12 மணி நேரம் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 26 Jun 2017 3:33 AM GMT (Updated: 2017-06-26T09:03:34+05:30)

ரம்ஜான் கொண்டாட்டம் காரணமாக டார்ஜிலிங் போராட்டம் 12 மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

டார்ஜிலிங்,

மேற்கு வங்க மாநிலம், டார்ஜிலிங் மலைப்பகுதியில் முஸ்லீம்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடுவதற்காக திங்கள் கிழமை ஒருநாள் மட்டும் 12 மணி நேரம் போராட்டத்தை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் கடைகள் திறக்கப்பட்டது என்று போராட்டக்குழு தெரிவித்துள்ளது. 

டார்ஜிலிங், கலிம்போங் மற்றும் குர்சியாங் ஆகிய நகரங்களை உள்ளடக்கிய பகுதியை தனி மாநிலமாக (கூர்க்காலாந்து) அறிவிக்க வேண்டும் என கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா (ஜிஜேஎம்) அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.  இதனால், கடந்த 10 தினங்களாக நடத்தி வரும் போராட்டத்தினால் டார்ஜிலிங் மலைப்பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மருந்துக்கடைகளை தவிர அனைத்துக்கடைகளும் உணவகங்களும் தங்கும் விடுதிகளும் மூடப்பட்டுள்ளன

இந்த நிலையில், ரம்ஜான் பண்டிகையொட்டி இன்று ஒருநாள் மட்டும் முஸ்லீம்கள் காலை 6 மணி முதல் முஸ்லீம்கள் வாகனங்களில் வெளியே செல்ல அனுமதிக்கலாம்  போராட்டக்குழு தெரிவித்துள்ளது. 

Next Story