சமூக வலைதளங்களில் அதிக பாலோயர்கள்; பிரதமர் மோடிக்கு அடுத்த இடத்தில் விராட் கோலி


சமூக வலைதளங்களில் அதிக பாலோயர்கள்; பிரதமர் மோடிக்கு அடுத்த இடத்தில் விராட் கோலி
x
தினத்தந்தி 26 Jun 2017 5:20 AM GMT (Updated: 2017-06-26T10:50:41+05:30)

சமூக வலைதளங்களில் அதிக பேரால் பின்பற்றப்படும் இந்தியர்களில் பிரதமர் மோடிக்கு அடுத்த இடத்தில் விராட் கோலி உள்ளார்.

புதுடெல்லி,

சமூக வலைதளமான பேஸ்புக்கில் இந்திய பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக அதிகம் பேரால் பின்தொடரப்படும் பிரபலம் என்ற பெருமையை இந்திய கிரிக்கெட்  அணி கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார். விராட் கோலியை பேஸ்புக்கில் 3.5 கோடி பேர் பின் தொடருகின்றனர். உலகில் அதிகம் பேர் பின்தொடரும் கிரிக்கெட் வீரராகவும் விராட் கோலி இருக்கிறார்.

இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் பிரதமர் மோடியை 4.22 கோடி பேர் பின்தொடருகின்றனர். பேஸ்புக்கில் அதிகம் பேர் பின்தொடரும் பிரபலங்கள் பட்டியலில் விராட் கோலிக்கு அடுத்தபடியாக  நடிகர் சல்மான் கான், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில், சல்மான் கானை விட விராட் கோலி பின்தொடருபவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்துக்கும் அதிகமாகும். விராட் கோலியை டுவிட்டரில் 16 லட்சம் பேரும், இன்ஸ்டாகிராமில் 14 லட்சம் பேரும் பின்தொடருகின்றனர்.

இதுகுறித்து விராட் கோலி கூறுகையில்,’ ரசிகர்கள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது வைத்துள்ள பாசத்துக்கு இது மற்றொரு எடுத்துக்காட்டு. அவர்களின் அன்பு விலைமதிப்பில்லாதது. இது எப்போதும் தொடர வேண்டும்,என்றார்.

Next Story