பரோலில் விடுதலை செய்யக்கோரி நீதிபதி கர்ணன் மனு


பரோலில் விடுதலை செய்யக்கோரி நீதிபதி கர்ணன் மனு
x
தினத்தந்தி 26 Jun 2017 11:15 PM GMT (Updated: 2017-06-27T01:28:43+05:30)

பரோலில் விடுதலை செய்யக்கோரி, மேற்கு வங்காள கவர்னருக்கு நீதிபதி கர்ணன் மனு அனுப்பி உள்ளார்.

கொல்கத்தா,

பரோலில் விடுதலை செய்யக்கோரி, மேற்கு வங்காள கவர்னருக்கு நீதிபதி கர்ணன் மனு அனுப்பி உள்ளார்.

கோர்ட்டு அவமதிப்பு வழக்கில், நீதிபதி கர்ணனுக்கு கடந்த மே 9–ந் தேதி, சுப்ரீம் கோர்ட்டு 6 மாத ஜெயில் தண்டனை விதித்தது. ஒரு மாதத்துக்கு மேல் தலைமறைவாக இருந்த கர்ணன், கடந்த 20–ந் தேதி, கோவை அருகே கைது செய்யப்பட்டார்.

மறுநாள், கொல்கத்தாவுக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்குள்ள பிரசிடென்சி ஜெயிலில் அடைக்கப்பட்டார். உடல்நலக்குறைவு காரணமாக, கொல்கத்தா அரசு ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், தன்னை பரோலிலோ அல்லது ஜாமீனிலோ விடுதலை செய்யக்கோரி, மேற்கு வங்காள கவர்னர் கேசரிநாத் திரிபாதிக்கு நீதிபதி கர்ணன் மனு அனுப்பி உள்ளார். அதில், அவர் கூறி இருப்பதாவது:–

என்னை சிறையில் அடைக்க சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில், அரசியல் சட்ட நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை. எனவே, இந்த குறைபாடுகள் சரிசெய்யப்பட்டு, அரசியல் சட்டத்தின் மேல்அதிகாரம் நிலைநிறுத்தப்படும்வரை, என்னை பரோலிலோ அல்லது ஜாமீனிலோ விடுதலை செய்ய வேண்டும்.

என்னை பரோலிலோ அல்லது ஜாமீனிலோ விடுதலை செய்தால், அதற்கு விதிக்கப்படும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு பின்பற்ற தயாராக இருக்கிறேன்.

ஆகவே, நீதியின் நலன் கருதி, கவர்னர் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, என்னை பரோலிலோ அல்லது ஜாமீனிலோ விடுவிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் நீதிபதி கர்ணன் கூறியுள்ளார்.


Next Story