சொகுசுக் கப்பல் சுற்றுலா அதிக பலன் தரும் - மகேஷ் ஷர்மா


சொகுசுக் கப்பல் சுற்றுலா அதிக பலன் தரும் - மகேஷ் ஷர்மா
x
தினத்தந்தி 27 Jun 2017 9:51 AM GMT (Updated: 2017-06-27T15:21:43+05:30)

சொகுசுக் கப்பல் சுற்றுலாவை மேம்படுத்துவதால் அதிக அந்நிய செலாவணியும், வேலை வாய்ப்புகளும் பெருகும் என்றார் அமைச்சர் மகேஷ் ஷர்மா.

புதுடெல்லி

சொகுசுக் கப்பல் சுற்றுலாவை மேம்படுத்துவதால் அதிக அந்நிய செலாவணியும், வேலை வாய்ப்புகளும் பெருகும் என்றார் அமைச்சர் மகேஷ் ஷர்மா.

இதுவரை இருந்து வரும் சோடையான சுற்றுலா திட்டங்களை விஞ்சி சொகுசுக் கப்பல் சுற்றுலா அந்நிய செலாவணியையும், வேலைவாய்ப்பையும் கொடுக்கும் என்று அவர் கூறினார்.

சொகுசுக் கப்பல் சுற்றுலா தொடர்பான கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் மகேஷ் ஷர்மா கூறும்போது பிரதமர் மோடி நாட்டின் சுற்றுலா தொடர்பான ஆற்றலை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பாக சொகுசுக் கப்பல் சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

கடந்த 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்திய சுற்றுலா முன்னேறியுள்ளது. உலகளவில் 52 ஆவது இடத்திலிருந்து நாம் 40 இடத்தை 2017 ஆம் ஆண்டில் அடைந்துள்ளோம். 

சொகுசுக் கப்பல் சுற்றுலா தொடர்பான செயல் திட்டம் ஒன்று அடுத்த 3-4 மாதங்களில் தயாராகும். எனவே அடுத்த ஆண்டு சொகுசுக் கப்பல் சுற்றுலா இந்தியாவில் நல்ல நிலையில் இருக்க வாய்ப்புண்டு என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.

இதற்கான வரைவு திட்டத்தை ஹாலந்து நாட்டின் பெர்மெல்லோ அஜ்மாலி எனும் நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது சொகுசுக்கப்பல் சுற்றுலா துறையில் இந்தியாவிற்கு சிறியதொரு பங்குள்ளது. எனினும் உலகம் முழுதும் சுமார் 23 மில்லியன் பயணிகள் இத்துறையை தங்கள் சுற்றுலா தேவைகளுக்கு பயன்படுத்துகிறார்கள். 

இந்தியர்களில் 1,20,000 பேர் ஒவ்வோர் ஆண்டும் சொகுசுக் கப்பல் சுற்றுலாவை அனுபவிக்க பதிவு செய்கிறார்கள். சுமார் 90 விழுக்காட்டினர் சிங்கப்பூருக்கு சொகுசுக் கப்பலில் செல்கின்றனர். 


Next Story