ஊழல் குற்றச்சாடுகளின் பேரில் 39 ஐ ஏ எஸ் அதிகாரிகள் மீது விசாரணை


ஊழல் குற்றச்சாடுகளின் பேரில் 39 ஐ ஏ எஸ் அதிகாரிகள் மீது விசாரணை
x
தினத்தந்தி 27 Jun 2017 10:20 AM GMT (Updated: 2017-06-27T15:50:10+05:30)

ஊழல் குற்றச்சாடுக்களின் காரணமாக 39 ஐ ஏ எஸ் அதிகாரிகள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

புதுடெல்லி

குடிமைப்பணி அதிகாரிகளை கட்டுப்படுத்தும் மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை இது தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த 39 பேர் தவிர மத்திய தலைமைச் செயலக அதிகாரிகள் 29 பேர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தவிர சில மூத்த அதிகாரிகள் உட்பட 68 அதிகாரிகள் மீதும் ஏராளமான புகார்கள் வந்ததை அடுத்து விசாரணை நடத்தப்படுகிறது. அவர்களின் பணி ஆவணங்கள் மறு ஆய்விற்கு உட்படுத்தப்படுகின்றன.

மத்திய அரசு தனது ஊழியர்கள் திறனையும், நிர்வாக அமைப்பையும் மேம்படுத்த நோக்கோடு செய்யப்படுகிறது.

சென்றாண்டு மத்திய அரசு 129 திருப்தியாக செயல்படாத ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு கொடுத்துள்ளது. அதே போல தனது 67,000 ஊழியர்களின் ஆவணங்களை சரிபார்த்து சரியாக பணிப்புரியாத அதிகாரிகள் மீது நடவடீகை எடுக்கவுள்ளது. இதில் 25,000 பேர் குடிமைப்பணி அதிகாரிகளாவர். மத்திய அரசில் சுமார் 48.85 இலட்சம் பணியாளர்கள் வேலை செய்வதாக சமீபத்திய புள்ளிவிஅரம் தெரிவிக்கிறது.


Next Story