ஜி எஸ் டியை துவங்கும் போது அரசியல் இருக்கக்கூடாது - ஜெட்லி


ஜி எஸ் டியை துவங்கும் போது அரசியல்   இருக்கக்கூடாது - ஜெட்லி
x
தினத்தந்தி 27 Jun 2017 10:55 AM GMT (Updated: 27 Jun 2017 10:55 AM GMT)

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஜி எஸ் டி அமலாக்கத்தை ஜூன் 30 ஆம் தேதி நள்ளிரவில் துவங்கும் போது காங்கிரஸ் கட்சி அரசியல் எதையும் செய்யக்கூடாது என்றார்.

புதுடெல்லி

ஜி எஸ் டி கவுன்சிலே இந்திய அளவில் முதன்முதலாக மத்திய நிதியமைச்சர் தலைமையில் அனைத்து மாநிலங்களும் பிரதிநிதித்தும் கொண்டிருந்த முதல் அமைப்பு என்று அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.

ஜி எஸ் டி அமைப்பு துவங்கப்படும் ஜூன் 30 ஆம் தேதி நள்ளிரவில் நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நடைபெறவுள்ளது. அதில் குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், மக்களவை தலைவர் சுமித்ரா மகாஜன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். ”காங்கிரஸ் கட்சி என்ன செய்யப்போகிறது என்று தெரியவில்லை. அனைத்து முடிவுகளும் ஒருமித்தே எடுக்கப்பட்டன. மத்திய அரசு நமது அரசியல் அமைப்பின் ஒருமித்து செயல்படும் இயல்பை எடுத்துக்காட்டுவதாக அமையும்” என்றார் ஜெட்லி.

கூட்டத்தில் கலந்து கொள்வதா வேண்டாமா என்பது பற்றி சிந்தித்து வருகிறோம் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. பொதுமக்களுக்கும், சிறு வியாபார்களுக்கும் ஜி எஸ் டி இடைஞ்சலாக இருக்கும் என்று காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சூரேஜ்வாலா கூறினார். இந்நிகழ்ச்சி இரவு 11 மணி நேர அளவில் துவங்கி நள்ளிரவு வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

உண்மையில் ஜி எஸ் டி காங்கிரச் ஆட்சிக்காலத்தில் பிரணாப் முகர்ஜி அவர்களால் ஏற்படுத்தப்பட்டது.


Next Story