ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் வேட்பாளர் மீரா குமார் நாளை வேட்பு மனு தாக்கல்


ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் வேட்பாளர் மீரா குமார் நாளை வேட்பு மனு தாக்கல்
x
தினத்தந்தி 27 Jun 2017 2:23 PM GMT (Updated: 2017-06-27T19:53:23+05:30)

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் வேட்பாளர் மீரா குமார் நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.

புதுடெல்லி,

ஜனாதிபதியாக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் ஜூலை 14-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து ஜனாதிபதி தேர்தல் வரும் ஜூலை 17-ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த நிலையில்  ஜனாதிபதி தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராம்நாத் கோவிந்த், தனது வேட்புமனுவை தாக்கல் செய்து உள்ளார். காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் முன்னாள் மக்களவை சபாநாயகர் மீரா குமாரை வேட்பாளராக நிறுத்தியது.

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் வேட்பாளர் மீரா குமார் நாளை காலை 11.30 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story