மீரா குமாரை தோற்கடித்த பாஜக எம்.பி க்கு ஓட்டுரிமை இல்லை


மீரா குமாரை தோற்கடித்த பாஜக எம்.பி க்கு ஓட்டுரிமை இல்லை
x
தினத்தந்தி 27 Jun 2017 4:27 PM GMT (Updated: 2017-06-27T21:57:07+05:30)

கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் குடியரசுத் தலைவர் வேட்பாளர் மீரா குமாரை தோற்கடித்த பாஜக உறுப்பினர் சேடிக்கு வாக்களிக்கும் உரிமை பறிக்கப்பட்டுள்ளது.

பட்னா

பிகாரின் தலைமை தேர்தல் அதிகாரி அஜய் விநாயக்கிற்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில் சேடி குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க இயலாது என்று குறிப்பிட்டுள்ளது. கங்காராம் என்பவர் தொடுத்த வழக்கில் பட்னா உயர்நீதிமன்றம் சேடி பஸ்வானின் உறுப்பினர் பதவியை பறித்தது. இதை எதிர்த்து சேடி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். ஆனால் உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு தடை விதித்தாலும் அவரது வாக்குரிமையை பறித்து வைத்துள்ளது. இறுதித் தீர்ப்பு வரும்வரை அவர் வாக்களிக்க இயலாது.

அவர் 2014 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிடும்போது தன் மீதான குற்ற வழக்குகளின் விவரங்களை அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டில் சிக்கினார்.

பிகாரின் சசாராம் தொகுதியில் சேடி வெற்றி பெற்றிருந்தார். தோல்வியடைந்த மீரா குமார் அன்றைய மக்களவைத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


Next Story