இந்தியாவிலும் பெட்யா ரென்ஷம்வேர் பாதிப்பு


இந்தியாவிலும் பெட்யா ரென்ஷம்வேர் பாதிப்பு
x
தினத்தந்தி 28 Jun 2017 8:43 AM GMT (Updated: 2017-06-28T14:13:04+05:30)

இந்திய கணினிகளிலும் பெட்யா ரென்ஷ்ம்வேர் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மும்பை,

ஆன்லைன் பணபரிவர்த்தனையின் போது கணினியை செயலிழக்க செய்து பணத்தை திருட பயன்படும் தீங்கிழைக்கும் மென்பொருளே ரென்ஷ்ம்வேர் எனப்படும். கடந்த சில மாதங்களாக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் உட்பட 100க்கும் மேற்பட்ட நாடுகளின் கணினிகளை ரென்ஷ்ம்வேர் மென்பொருளான வானா க்ரை(wannacry) தாக்கி பணத்தை திருடிய தகவல்கள் வெளிவந்தன. 

தற்போதும் அதேபோல் பெட்யா எனப்படும் ரன்ஷம்வேர் மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தாக்குதல் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டது. இதைதொடர்ந்து இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகமான மும்பையின் ஜவகர்லால் நேரு துறைமுகத்தின் கணினிகளில் பெட்யாவின் தாக்குதல் கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த பெட்யா மென்பொருள் மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்குதளத்தை பயன்படுத்தும் கணினிகளை தாக்குகிறது. 

பெட்யாவின் தாக்குதாலில் இருந்து தப்பிக்க அதன் செயல்பாடை கண்டறிந்த உடன் கணினியை அணைக்கவும். இதன் மூலம் கணினியில் உள்ள கோப்புகளை காப்பாற்ற முடியும்.

Next Story