மின்னணு ஒப்பந்தப்புள்ளிகளால் அரசுக்கு 25 பில்லியன் டாலர்கள் மிச்சம் - மூத்த அதிகாரி


மின்னணு ஒப்பந்தப்புள்ளிகளால் அரசுக்கு 25 பில்லியன் டாலர்கள் மிச்சம் - மூத்த அதிகாரி
x
தினத்தந்தி 28 Jun 2017 4:01 PM GMT (Updated: 28 Jun 2017 4:01 PM GMT)

புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிறு மற்றும் குறு தொழில்கள் பயனடைய வேண்டும் என்று மூத்த அதிகாரி கேட்டுக்கொண்டார்.

புதுடெல்லி

மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையின் கூடுதல் செயலர் அஜய் குமார் அரசு டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பயனபடுத்தி தனது மின்னணு ஒப்பந்தப்புள்ளி கோரிக்கைகளை வெளியிட்டு வருகிறது. இதன் மூலம் வருடத்திற்கு 25 பில்லியன் டாலர்களை (சுமார் 1.30 இலட்சம் கோடி) மிச்சம் பிடிக்கிறது. ஆண்டு தோறும் மொத்தமாக 500 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள கொள்முதலில் 25 பில்லியன் டாலர்களை மிச்சம் பிடிக்கிறது என்றார் அஜய்.

தற்போது இண்டஸ்ட்ரி 4.0 எனும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சிறு மற்றும் குறுந் தொழில்கள் 30 சதவீதம் வரை தங்களது உற்பத்தி திறனில் அதிகரிக்கலாம் என்று கூறினார் அவர்.

குறிப்பாக உற்பத்தி, மின்சாரம் இன்னும் அது போன்ற தொழில்களில் இந்தப் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பயனடைவதை நடைமுறைக்கு கொண்டு வர ஆறு செயலாற்றுக்குழுக்களை    தனது அமைச்சரவை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Next Story