நாடு முழுவதும் அமலுக்கு வந்தது ஜி.எஸ்.டி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி தொடங்கி வைத்தனர்
ஜி.எஸ்.டி. வரியை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி இணைந்து தொடங்கி வைத்தனர்.
புதுடெல்லி,
நம் நாட்டில் தற்போது உற்பத்தி வரி, விற்பனை வரி என பல்வேறு விதமான மறைமுக வரிகள் உள்ளன. இந்த வரிகளுக்கு மாற்றாக நாடு முழுவதும் ஒரே சீரான வரியான சரக்கு, சேவை வரி என்ற ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி, ஜூலை 1-ந் தேதி இன்று முதல் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்டது.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்துவதற்காக இன்று (வெள்ளிக் கிழமை) நள்ளிரவு பாராளுமன்றத்தில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தின் நடைபெறும் இந்த விழாவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி முன்னிலை வகித்தார். பாராளுமன்றத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு ஜிஎஸ்டி அறிமுக கூட்டம் தொடங்கியது. முதலில் மத்திய மந்திரி அருண் ஜெட்லி ஜி.எஸ்.டி குறித்து உரையாற்றினார். அவரை தொடர்ந்து பிரதமர் மோடி ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை தொடங்கி வைத்து உரையாற்றினார். இறுதியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஜிஎஸ்டி குறித்து உரையாற்றினார்.
அதனைதொடர்ந்து மணியடித்து ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி இணைந்து தொடங்கி வைத்தனர். நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு முறையான ஜிஎஸ்டி அமலுக்கு வந்தது.
Related Tags :
Next Story