ராணுவம் குறித்து சர்ச்சை கருத்து: ஆசம் கானுக்கு எதிராக வழக்குப்பதிவு


ராணுவம் குறித்து சர்ச்சை கருத்து: ஆசம் கானுக்கு எதிராக வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 1 July 2017 10:37 AM IST (Updated: 1 July 2017 10:37 AM IST)
t-max-icont-min-icon

ராணுவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த ஆசம் கானுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரான்பூர்,

உத்தர பிரதேசத்தில் பிரதான கட்சியான சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஆசம் கான். சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவ்வப்போது பேசி சிக்கலில் மாட்டிக்கொள்வது இவரது வழக்கம்.  நேற்று ராம்பூரில் சமாஜ்வாடி கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய ஆசம் கான் ராணுவ வீரர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 

ஆசம் கான் கூறியதாவது:- “ ஜம்மு-காஷ்மீர், திரிபுரா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பெண்களிடம் இந்திய ராணுவத்தினர் பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், சில நேரங்களில் ராணுவ வீரர்களின் பிறப்புறுப்புகளை துண்டிக்க வேண்டிய நிலைக்கு அங்குள்ள பெண்கள் தள்ளப்படுகிறார்கள். எனப் பேசியதாகத் தெரிகிறது. ஆசம்கானின் இந்தக் கருத்தானது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுக்களை ம்றுத்த ஆசம் கான், தனது கருத்தை ஊடகங்கள் தவறாக திரித்துவிட்டதாக  தெரிவித்தார்.  ஆசம் கான் கூறுகையில், “ எனது கருத்தை ஊடகங்கள் திரித்து வெளியிட்டு இருக்கின்றன என்றார். இந்த நிலையில், ஆசம் கானுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் உள்ள ஹஸ்ராத்கஞ்ச் மற்றும் ராம்பூர் சிவில் லைன்ஸ் காவல் நிலையங்களில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Next Story