முன்னாள் பிரதமர் தேவகவுடாவுடன் ஜனாதிபதி வேட்பாளர் மீரா குமார் சந்திப்பு

முன்னாள் பிரதமர் தேவகவுடாவை ஜனாதிபதி வேட்பாளர் மீரா குமார் இன்று சந்தித்து பேசினார்.
பெங்களூரு,
தற்போது, ஜனாதிபதியாக இருக்கும் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் (ஜூலை) நிறைவடைகிறது. புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 17-ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இந்த தேர்தலில், பா.ஜ.க. சார்பில் பீகார் மாநில முன்னாள் கவர்னர் ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் சார்பில் மக்களவை முன்னாள் சபாநாயகர் மீராகுமாரும் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலில் எதிரும் புதிருமாக மோதும் ராம்நாத் கோவிந்த், மீராகுமார் ஆகிய 2 பேரும் ஒவ்வொரு மாநிலமாக சென்று, எம்.பி., எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஓட்டு வேட்டையில் ஈடுபட திட்டமிட்டனர். அந்த வகையில், ராம்நாத்கோவிந்த் இன்று சென்னை வந்துள்ளார். மீராகுமாரும் இன்று சென்னை வந்து ஆதரவு கோர உள்ளார். இதற்கிடையில்,கர்நாடக மாநிலம் சென்ற மீராகுமார், முன்னாள் பிரதமர் தேவகவுடாவை சந்தித்து பேசினார்.
Related Tags :
Next Story






