விவசாயிகளுக்கு எதிராக அரசு ‘இரட்டை நிலையை’ கடைபிடிக்கிறது - யோகேந்திர யாதவ்


விவசாயிகளுக்கு எதிராக அரசு ‘இரட்டை நிலையை’ கடைபிடிக்கிறது - யோகேந்திர யாதவ்
x
தினத்தந்தி 1 July 2017 8:51 PM IST (Updated: 1 July 2017 8:51 PM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு ‘இரட்டை நிலையை’ கடைபிடிப்பதாக ஸ்வராஜ் அபியான் தலைவர் யோகேந்திர யாதவ் கூறினார்.

புதுடெல்லி

“தொலைபேசி நிறுவனங்களை திவாலாவதிலிருந்து அரசு காப்பாற்றுகிறது எனும் போதும், முந்தைய ஐமுகூ அரசு 2009 ஆம் ஆண்டில் பெரும் தொழிலகங்களை மீட்டெடுத்தப்போதும் விவசாயிகளின் தார்மீக எண்ணங்களை கணக்கில் வைக்கவில்லை. விவசாயிகளின் மீது இரட்டை நிலையை அரசு கடைபிடிப்பது இதன் மூலம் தெரிய வருகிறது” என்றார் யோகேந்திரா.

செயற்கையாக விவசாயப் பொருட்களின் விலை நாட்டில் வைக்கப்பட்டிருப்பதாக யோகேந்திரா கூறினார்.

“இந்நாடு விவசாயிகளுக்கு கடன் பட்டிருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளில் விவசாயப்பொருட்களின் விலை செயற்கையாக வைக்கப்பட்டிருப்பதால் அவர்கள் நஷ்டமடைந்திருக்கிறார்கள்” என்றார் அவர்.

விவசாயிகளின் ஒட்டுமொத்தக் கடன் ரூ. 50 இலட்சம் கோடி; அவர்கள் அதில் ஒரு சிறு பகுதியை மட்டுமே கேட்கிறார்கள் என்றார் யோகேந்திரா. 

நாடு முழுவதும் 140 விவசாய சங்கங்கள் இணைந்து ஏற்படுத்தியுள்ள புதிய அமைப்பு ஒன்றின் கூட்டத்தில் அவர் பேசும் போது இவ்வாறு கூறினார். ஜூலை 6 ஆம் தேதியிலிருந்து விவசாயிகளின் நடைபயணம் ஒன்று கிசான் முக்தி யாத்ரா எனும் பெயரில் மாண்ட்சோர் எனுமிடத்திலிருந்து துவங்கி ம.பி. மராட்டியம், குஜராத், ராஜஸ்தான், உ.பி மற்றும் ஹரியானா வழியே சென்று ஜூலை 18 அன்று டெல்லியை அடையும். அன்றுதான் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் துவங்கவுள்ளது. விவசாயிகள் காலவரையற்ற போராட்டம் ஒன்றை ஜந்தர் மந்தரில் துவங்கவுள்ளார்கள். நடைபயணத்தின் போது விவசாயிகள் இரண்டு கோரிக்கைகளை முன் வைப்பார்கள்; ஒன்று கடன் தள்ளுபடி மற்றொன்று உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான விலை என்று கூறினார் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வி எம் சிங். 

யோகேந்திரா கூறுகையில், “எப்படி ஒரு நாடு ஒரே வரி” இருக்கிறதோ அதே போல ஒரு நாடு ஒரு விவசாயிகள் இயக்கம் துவங்கப்படுகிறது” என்றார்.


Next Story