நீதிபதி கர்ணனுக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறைத் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும்- சுப்ரீம் கோர்ட்
நீதிபதி கர்ணனுக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறைத் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கூறி உள்ளது.
புதுடெல்லி
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதியாக இருந்த கர்ணனுக்கு சுப்ரீம் கோர்ட்டு 6 மாத ஜெயில் தண்டனை விதித்தது. நீதிபதி கர்ணனின் ஜாமீன் மனுவை விசாரிக்கவும் சுப்ரீம்கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.
நீதிபதி கர்ணன் கடந்த மாதம் 9-ந்தேதி தண்டனை விதிக்கப்பட்ட அதே நாளில், சென்னைக்கு வந்து தலை மறைவானார். அவரை பிடிக்க மேற்கு வங்காள மாநில போலீஸ் டி.ஜி.பி., போலீஸ் தனிப்படைகளை அமைத்தார்.
அப்படைகள், சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நீதிபதி கர்ணனை தேடி வந்தது. தலைமறைவாக இருந்த நிலையில், கர்ணன் கடந்த 12-ந் தேதி, நீதிபதி பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
இந்நிலையில், அவர் கோவை புறநகர் பகுதியில் ஒரு வீட்டில் தங்கி இருப்பதாக கொல்கத்தா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கோவை போலீசாரின் ஒத்துழைப்புடன், மலுமிச்சம்பட்டி அருகே மாச்சேகவுண்டன்பாளையம் பகுதியில் உள்ள அந்த வீட்டை கொல்கத்தா போலீசார் முற்றுகையிட்டனர்.
ஆனால், பத்திரிகையாளர்கள் வராமல் நான் வெளியே வரமாட்டேன் என்று கூறி, போலீசாருடன் கர்ணன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. சிறிது நேரம் கழித்து, அவரை கைது செய்த போலீசார், அவரை போலீசார் கொலகத்தா கொண்டு சென்று அங்கு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் மனு ஒன்று அளிக்கப்பட்டது.
நீதிபதி கர்ணனின் ஜாமீன் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள சுப்ரீம்கோர்ட் மறுத்துவிட்டது. ஜாமீன் வழங்க வேண்டும் என்ற கர்ணன் தரப்பு வழக்கறிஞர்களின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நிராகரித்துள்ளனர். மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், நீதிபதி கர்ணன் 6 மாத சிறைத் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும் என்று திட்டவட்டமாக கூறினர்.

Related Tags :
Next Story