பயங்கரவாதி சலாவுதீன் இயக்கம் சார்பில் காஷ்மீர் பெயரில் நிதி சேகரிப்பு முகாம்


பயங்கரவாதி சலாவுதீன் இயக்கம் சார்பில் காஷ்மீர் பெயரில் நிதி சேகரிப்பு முகாம்
x
தினத்தந்தி 3 July 2017 4:35 PM IST (Updated: 3 July 2017 4:35 PM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதி சலாவுதீனின் இயக்கம் நிதி சேகரிப்பு முகாமை நடத்தி வருகிறது.



ஸ்ரீநகர், 


இந்தியா, ஐரோப்பிய ஒன்றியத்தால் பயங்கரவாத இயக்கம் என அறிவித்து, தடை செய்யப்பட்டிருக்கும் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் தலைவன், சையத் சலாவுதீன் (வயது 71). இவர் கடந்த 26–ந் தேதி அமெரிக்காவால் சர்வதேச பயங்கரவாதி என பிரகடனம் செய்யப்பட்டுள்ளான். இந்த நிலையில், முசாப்பராபாத் (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ளது.) தாஹ்லி மண்டியில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் சையத் சலாவுதீன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்,  

காஷ்மீரில் உள்ள கள நிலவரத்தை கண்டுகொள்ளாமல், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தாஜா செய்வதற்காக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம், என்னை சர்வதேச பயங்கரவாதி என அறிவித்து நடவடிக்கை எடுத்திருப்பது, முட்டாள்தனமானது.

இந்த நடவடிக்கை காரணமாக, காஷ்மீர் மக்களின் சுய நிர்ணய உரிமைக்காக நான் நடத்தி வருகிற போராட்டத்தில் எந்தவொரு மாற்றமும் வந்து விடாது. டிரம்ப் நிர்வாகம் எடுத்துள்ள இந்த நடவடிக்கையை அமெரிக்க சட்டங்கள் கூட ஆதரிக்காது. டிரம்ப் நிர்வாகம், சர்வதேச பயங்கரவாதி என்று என்னை அறிவிப்பதற்கான ஒரு நிபந்தனையை கூட பூர்த்தி செய்யவில்லை. ஒரு சவாலாக கூறுகிறேன். கடந்த 27 ஆண்டு காலத்தில் நான் செய்த எந்தவொரு காரியத்தையும் அல்லது உத்தரவிட்ட எந்தவொரு காரியத்தையும் பயங்கரவாதம் என்று நீங்கள் குறிப்பிட முடியாது என்றான். 

மேலும் இந்தியாவின் எந்தஒரு இடத்திலும் எப்போது வேண்டும் என்றாலும் எங்களால் தாக்குதல் நடத்த முடியும் என்றான் சலாவுதீன். 

இப்போது அவனுடைய இயக்கம் காஷ்மீர் பெயரில் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிதி சேகரிப்பு முகாமில் ஈடுபட்டு உள்ளது. சர்வதேச பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டு உள்ள சலாவுதீனின் பலாக்-இ- இசானியாத் இயக்கம் நிதியை சேகரித்து வருகிறது. அங்கு வைக்கப்பட்டு உள்ள பேனர்களில் காஷ்மீரி பிரினைவாதிகள் புகைப்படங்களும் இடபெற்று உள்ளது.

Next Story