பிரதமர் வேட்பாளருக்கான போட்டியில் நான் இல்லை :நிதிஷ் குமார் விளக்கம்
2019- ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பிரதமர் வேட்பாளருக்கான போட்டியில் நான் இல்லை என்று பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
பாட்னா,
மத்தியில் ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது.
எதிர்க்கட்சிகளின் இந்த ஒற்றுமை 2019–ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலிலும் நீடிக்க வேண்டும் என பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
மேலும் பீகார் மாநில முதல்–மந்திரியும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ் குமாரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்ற கருத்தும் எழுந்துள்ளது.
மேலும் பீகார் மாநில முதல்–மந்திரியும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ் குமாரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்ற கருத்தும் எழுந்துள்ளது.
இந்த நிலையில் பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நிதிஷ் குமாரிடம் செய்தியாளர்கள் இவ்விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். இக்கேள்விக்கு பதிலளித்த நிதிஷ் குமார், “2019–ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளருக்கான போட்டியில் நான் இல்லை. இதை நான் ஏற்கனவே பலமுறை தெளிவுபடுத்தி இருக்கிறேன்.
பிரதமர் வேட்பாளருக்கு நான் தகுதியானவர் இல்லை என்பதே என் கருத்து.எதிர்க்கட்சிகள் ஒன்றுபடுவதற்கு வேட்பாளர் முக்கியமில்லை. மாறாக திட்டம் மற்றும் கொள்கைகளின் அடிப்படையிலேயே எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். அப்போது தான் வெற்றி பெற முடியும்” இவ்வாறு நிதிஷ் குமார் கூறினார்.

Related Tags :
Next Story