சுயேச்சை மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேரும் ராம்நாத்கோவிந்திற்கு ஆதரவாக வாக்களிக்க முடிவு?
சுயேச்சை மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேரும் ராம்நாத்கோவிந்திற்கு ஆதரவாக வாக்களிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
புதுடெல்லி,
மாநிலங்களவையில் சுயேச்சை உறுப்பினர்களாக இருக்கும், சமாஜ்வாடியில் இருந்து நீக்கப்பட்ட அமர்சிங், ஒடிசாவைச் சேர்ந்த ஏ.வி.சுவாமி, கேரளாவைச் சேர்ந்த ராஜீவ் சந்திரசேகர், தொழில் அதிபர்களான மராட்டியத்தைச் சேர்ந்த சஞ்சய் தத்தாத்ரேயா ககாடே மற்றும் சுபாஷ் சந்திரா, பரிமள் நத்வானி ஆகிய 6 பேரும் ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்தை ஆதரித்து ஓட்டுப்போடுவார்கள் என்று எதிர்பார்ப்பதாக டெல்லியில் பாரதீய ஜனதா தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக பாரதீய ஜனதா அவர்களை தொடர்பு கொண்டு பேசி இருப்பதாகவும் அவர் கூறினார்.ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத் கோவிந்துக்கு மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளை பெறுவதற்கான முயற்சியில் பாரதீய ஜனதா தீவிரமாக ஈடுபட்டு இருப்பதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story