நிதிஷ் குமாரை ஜூலை 6 அன்று மீரா குமார் சந்திக்கவுள்ளார்
எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மீரா குமார் வரும் ஜூலை 6 ஆம் தேதியன்று பிகார் முதல்வர் நிதிஷ் குமாரை சந்திக்கவுள்ளார்.
பட்னா
இது பற்றி தகவல் தெரிவித்த பிகார் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் சதானந்த் சிங் பிகார் முதல்வர் ஏற்கனவே ராம்நாத் கோவிந்த்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இருப்பினும் நிதிஷ் குமாரை சந்திப்பதில் தவறில்லை என்றார்.
“ மீரா குமார் வேட்பாளர், மட்டுமல்ல பிகாரின் மகளும் ஆவார். அவர் அனைவரிடமும் ஆதரவு கோருவதில் தவறில்லை. மேலும் முதல்வர் நிதிஷ் அவரது கோரிக்கையை ஏற்கவும் செய்வார் என்று நம்புகிறேன்” என்றார் சிங். அவரது வருகையின்போது தனக்கு ஆதரவு தெரிவிக்கக்கூடிய கட்சி உறுப்பினர்களை அவர் சந்திப்பார் என்றார் சிங்.
Related Tags :
Next Story