சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வாலிபரை அடித்து கொலை செய்த பெண்கள்


சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வாலிபரை அடித்து கொலை செய்த பெண்கள்
x
தினத்தந்தி 4 July 2017 10:50 AM IST (Updated: 4 July 2017 10:50 AM IST)
t-max-icont-min-icon

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞரை, பெண்கள் கட்டிவைத்து அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் ரும்காரா மாவட்டத்திற்கு உட்பட்ட ராம்கர்க் கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி, உறவினர் திருமணத்திற்காக குதுமித் பகுதிக்கு பெற்றோருடன் சென்றுள்ளார்.

அப்போது அந்த சிறுமியை மிதுன் அன்சாடா என்பவன், அருகிலுள்ள வனப்பகுதிக்கு தூக்கி சென்று, கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளான்.

தகவல் அறிந்த சிறுமியின் உறவினர்கள், மிதுன் அன்சாடாவை கண்டுபிடித்து ராம்கர்க் கிராமத்திற்கு இழுத்து வந்துள்ளனர்.

பின்னர் பொதுவெளியில் அவனை கட்டிவைத்து அடித்தனர். அப்போது ஆவேசம் கொண்ட பெண்கள், பாலியல் வன்கொடுமை செய்த இளைஞனை கொடூரமாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்த இளைஞனை பெண்களே அடித்து கொலை செய்த சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story