பசு பாதுகாப்பு என மனிதர்களை தாக்குவது இந்துத்துவாவிற்கு எதிரானது சிவசேனா
பசு பாதுகாப்பு என மனிதர்களை கும்பலாக தாக்குவது இந்துத்துவாவிற்கு எதிரான என சிவசேனா கூறிஉள்ளது.
மும்பை,
நாடு முழுவதும் பசு பாதுகாவலர்கள் என தங்களை அழைத்துக் கொள்பவர்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபடும் சம்பவமானது அதிகரித்து காணப்படுகிறது. பசு பாதுகாவலர்கள் வன்முறையில் ஈடுபடுவது அதிகரித்து வரும்நிலையில் அதற்கு கடும் எதிர்ப்பும் எழுந்து உள்ளது.
இந்த நிலையில் காந்தியடிகளின் சபர்மதி ஆசிரமத்தின் நூற்றாண்டு விழாவில் பேசிய பிரதமர் மோடி, பசு பாதுகாப்பு என்ற பெயரில் மக்களை கொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என எச்சரிக்கை விடுத்தார். ஆனால் கும்பல் தாக்குதல் நின்றதாக தெரியவில்லை.
இதுபோன்ற சம்பவம் தொடர்பாக பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் இருந்து செய்தி வந்த வண்ணமே உள்ளது.
இந்நிலையில் பசு பாதுகாப்பு என மனிதர்களை கும்பலாக தாக்குவது இந்துத்துவாவிற்கு எதிரான என சிவசேனா கூறி உள்ளது.
பா.ஜனதா ஆளும் மாநிலங்களான ஜார்க்கண்ட், அரியானா, உத்தரபிரதேசம் மற்றும் பிற மாநிலங்களில் நடைபெறும் சம்பவங்களை குறிப்பிட்டு உள்ள சிவசேனா பசு பாதுகாப்பு என மனிதர்களை கும்பலாக தாக்குவது இந்துத்துவாவிற்கு எதிரானது, மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக மத்தியில் உள்ள நரேந்திர மோடி அரசு ஒரு தேசிய கொள்கையுடன் வரவேண்டும் என வலியுறுத்தி உள்ளது. மாட்டிறைச்சி விவகாரம் உணவு, தொழில் மற்றும் வேலைவாய்ப்புடன் தொடர்புடையது. எனவே இவ்விவகாரம் தொடர்பாக ஒரு தேசிய கொள்கையானது அவசியமானது.
நேற்றுவரையில் பசுகளை பாதுகாத்தவர்கள் இந்துக்களாக இருந்தார்கள், இன்று அவர்கள் கொலையாளியாக மாறிவிட்டனர். கும்பல் தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கையை வரவேற்கிறோம். பசு பாதுகாப்பு என்ற பெயரில் சட்டத்தை கையில் எடுக்க யாருக்கும் உரிமைகிடையாது. கும்பல் தாக்குதல் என்பது இந்துத்துவா கொள்கைகளுக்கு எதிரானது. இந்துத்துவாவிற்கு தெளிவான வரையறை கொடுத்த பிரதமர் மோடிக்கு நன்றி. பிரச்சனைகளை எளிதாக்க பிரதமர் மோடி மாட்டிறைச்சி விவகாரத்தில் தேசிய கொள்கையை கொண்டுவர வேண்டும் என சிவசேனா தன்னுடைய கட்சி பத்திரிக்கையான சாம்னாவில் தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story