3 நாள் பயணமாக இஸ்ரேல்-ஜெர்மனி புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி


3 நாள் பயணமாக இஸ்ரேல்-ஜெர்மனி புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி
x
தினத்தந்தி 4 July 2017 3:54 PM IST (Updated: 4 July 2017 3:54 PM IST)
t-max-icont-min-icon

பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் சுற்றுப்பயணமாக இஸ்ரேல் புறப்பட்டு சென்றார். அந்நாட்டுக்கு இந்திய பிரதமர் செல்வது இதுவே முதல் முறை.

புதுடெல்லி,


பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக புதுடெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இஸ்ரேல் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

இஸ்ரேல் பிரதமர் சென்றடையும் பிரதமர் மோடி இன்று மாலை அந்நாடு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹுவுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.  இரு நாடுகளுக்கு இடையே பல முக்கிய உறவுகளை உறுதிப்படுத்துவதற்கான வழிகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்துகிறார்கள். இந்த பேச்சுவார்த்தையின்போது பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நாளை பிரதமர் மோடிக்கு டெல் அவிவ் நகரில் உள்ள இந்தியர்கள் வரவேற்பு அளிக்கிறார்கள்.  நாளை மறுநாள் இஸ்ரேலிய தொழில் அதிபர்களை சந்தித்துப் பேச உள்ளார்.  ஹைபா நகரில் உள்ள இந்திய கல்லறையில் இந்திய ராணுவ வீரர்களின் நினைவிடங்களில் மோடி அஞ்சலி செலுத்துகிறார்.

இஸ்ரேல் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் நடைபெறும் ஜி20 நாடுகள் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். ஜெர்மனி பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி நாடு திரும்புகிறார்.

Next Story