கேரளாவை அடுத்து தமிழகத்தில் அதிக டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர் - சுகாதார துறை
சுகாதார துறை வெளியிட்டு உள்ள தகவலின் படி கேரளாவை அடுத்து தமிழகத்தில் அதிக டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
புதுடெல்லி
மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா செவ்வாய்க்கிழமை டெல்லியில் வெக்டார் நோய்த்தொற்று நோய்களுக்கு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் பணிகளை மேற்பார்வையிடார். நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் சி.கே. மிஸ்ரா, ஐ.சி.எம்.ஆர்.ஆர்.ஏ. டைரக்டர் ஜெனரல் சவுமியா சுவாமிநாதன், நேஷனல் வெக்டார் பார்ன் டிசைன் கண்ட்ரோல் புரோகிராம் (என்விபிடிசிபி) மற்றும் பிற நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி நட்டா கூறியதாவது:-
இரண்டு வித தயார் நிலைகள் எடுக்கபட்டு உள்ளது. டெல்லி மற்றும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மற்றொன்று. மேலும், நாங்கள் எங்கள் தயார்நிலையில் திருப்தியடைகிறோம் என்று சொல்லலாம். இந்த விஷயத்தில் ஏற்கனவே மூன்று வீடியோ கான்பரசிங் நடத்தப்பட்டு உள்ளன. மற்றும் 13 ஆலோசனைகளை வழங்கப்பட்டு உள்ளது.
சுகாதாரத்துறை செயலாளர் விரைவில் மற்ற மாநிலங்களுடன் வீடியோ கான்பரசிங் நடத்துவார் என கூறினார்.
செயலாளர் மிஸ்ரா கூறும் போது பருவமழை துவங்குவதால் கேரளாவில் டெங்கு, மலேரியா மற்றும் பிற நோய்களின் தாக்குதல்களை இருந்து வருகிறது. நாங்கள் அங்கு ஏற்கனவே ஒரு குழுவை அனுப்பியிருந்தோம், அது நிலைமையை மதிப்பிட்ட பிறகு திரும்பி வந்துவிட்டது. ஆனால் இந்த விஷயத்தில் கேரளாவிலிருந்து எந்த கோரிக்கையும் வரவில்லை. அரசிடம் ஒரு வலுவான சுகாதார அமைப்பு உள்ளது என கூறினார்
இந்தியாவில் இந்த ஆண்டில் 18,700 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர் என சுகாதாரத்துறை அமைச்சகம், தெரிவித்து உள்ளது. ஜூலை 2 ம் தேதி கேரளாவில் அதிகபட்சமாக 9,104 நோயாளிகளும் தமிழ்நாட்டில் 4,174 நோயாளிகளும் பதிவாகியுள்ளனர். கர்நாடகா 1,945 நோயாளிகளும், குஜராத் 616 நோயாளிகளும், ஆந்திரப் பிரதேசம் 606 நோயாளிகளும், மேற்கு வங்கம் 469 நோயாளிகளும் பதிவாகி உள்ளனர்.
ஜூலை 2 ம் தேதி வரை 10,952 சிக்குன்குனியா நோயாளிகள் நாட்டில் பதிவாகியுள்ளனர். இதில் கர்நாடகாவில் அதிகப்படியாக 4047 பேர் பதிவாகி உள்ளனர் என தெரிவித்து உள்ளது.

Related Tags :
Next Story