மதகலவரம் தொடர்பாக மேற்கு வங்க அரசிடம் உள்துறை அமைச்சகம் அறிக்கை கோரியது
மதகலவரம் தொடர்பாக மேற்கு வங்காள மாநில அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டு உள்ளது.
புதுடெல்லி,
மேற்கு வங்காள மாநிலம் வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் படுரியா என்ற பகுதியில் நேற்று முன்தினம் மாலை திடீரென இரு மதத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
முகநூலில் ஹோலி தொடர்பான பக்கத்தில் ஆட்சேபனைக்குரிய கருத்து ஒன்று வெளியானதால் இந்த கலவரம் ஏற்பட்டதாக தெரிகிறது. ஆங்காங்கே தீவைப்பு சம்பவங்களும், மோதல்களும் ஏற்பட்டன. கலவரத்தை கட்டுப்படுத்த மாநில போலீசாருக்கு உதவியாக மத்தியில் இருந்து 3 கம்பெனி துணை ராணுவம் (300 வீரர்கள்) மேற்குவங்காளத்துக்கு அனுப்பப்பட்டது.
அம்மாநிலத்தின் பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் கைலாஷ் விஜய்வர்கியா, மேற்குவங்காள போலீசார் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டனர். எனவே இதில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்குக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் பேசிய அம்மாநில கவர்னர் திரிபாதி, மத கலவரம் குறித்தான தகவல்களை அவரிடம் கூறிஉள்ளார்.
வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தின் பாதூரியா பகுதியில் தொடர்ந்து மோசமான நிலையே நீடித்து வருகிறது. ஆனால் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. இன்று காலை 11 மணி வரையில் எந்தஒரு அசம்பாவித சம்பவம் தொடர்பாகவும் தகவல் பதிவாகவில்லை என போலீஸ் தெரிவித்து உள்ளது. சட்டம் ஒழுங்கை பின்பற்ற வேண்டும் என மக்களுக்கு தொடர்ச்சியாக அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. மூத்த போலீஸ் அதிகாரிகள் பதட்டமான பகுதிகளில் நிலை நிறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என போலீசும் கேட்டுக் கொண்டு வருகிறது. மக்களை இயல்பு நிலைக்கு கொண்டுவர போலீஸ் பணியாற்றி வருகிறது.
ஷிலாத் - பான்கான் இடையிலான உள்ளூர் ரெயில் சேவையானது பாதிக்கப்பட்டு உள்ளது. பாதூரியா பகுதியில் உள்ள மார்க்கெட்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது, கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளது. பள்ளி, கல்லூரிகளில் மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளது. இந்த மத மோதல்கள் விவகாரம் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா, கவர்னர் திரிபாதி இடையே சச்சரவை ஏற்படுத்தி உள்ளது. மேற்குவங்க மாநில கவர்னர் கேசரி நாத் திரிபாதி என்னை தொலைபேசியில் அழைத்து மிரட்டினார். பேச்சால் எனக்கு அவமானம் ஏற்பட்டது மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார். ஆனால் கவர்னர் மாளிகை மறுப்பு தெரிவித்து உள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மம்தா பானர்ஜி மற்றும் திரிபாதியுடன் பேசிஉள்ளார். மத கலவரம் தொடர்பாக அறிக்கையை கேட்டு உள்ளார்.
Related Tags :
Next Story