சரக்கு, சேவை வரி நாட்டின் முன்னேற்றத்துக்கு வழிவகை செய்யும் பாபா ராம்தேவ்
சரக்கு, சேவை வரி நாட்டின் முன்னேற்றத்துக்கு வழிவகை செய்யும் பாபா ராம்தேவ்
ஆலந்தூர்,
சென்னை வந்து இருந்த யோகா குரு பாபா ராம்தேவ், மும்பைக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர், விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:–
மத்திய அரசு கொண்டு வந்து உள்ள சரக்கு, சேவை வரி நல்ல முயற்சியாகும். 2–ம் பொருளாதார சீர்திருத்தத்துக்கும், நம் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கும் வழிவகை செய்யும். அனைத்து வரி விதிப்புகளும் ஒரே வரியில் கொண்டு வரப்பட்டு உள்ளது.
சித்தா உள்பட மூலிகை மருத்துவம் சம்பந்தப்பட்டவைகள் வளர்ச்சி அடையும். காந்தியின் கனவான சுதேசி பொருட்கள் விற்பனையும் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story