6 மாத ஜெயில் தண்டனை அளித்ததற்கு நீதிபதி கர்ணனின் விரும்பத்தகாத செயல்களே காரணம்


6 மாத ஜெயில் தண்டனை அளித்ததற்கு நீதிபதி கர்ணனின் விரும்பத்தகாத செயல்களே காரணம்
x
தினத்தந்தி 6 July 2017 3:01 AM IST (Updated: 6 July 2017 3:01 AM IST)
t-max-icont-min-icon

கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் நீதிபதி கர்ணனுக்கு 6 மாத ஜெயில் தண்டனை விதித்து சுப்ரீம் கோர்ட்டு 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு, கடந்த மே 9–ந் தேதி சுருக்கமான தீர்ப்பு அளித்தது.

புதுடெல்லி,

கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் நீதிபதி கர்ணனுக்கு 6 மாத ஜெயில் தண்டனை விதித்து சுப்ரீம் கோர்ட்டு 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு, கடந்த மே 9–ந் தேதி சுருக்கமான தீர்ப்பு அளித்தது. இந்நிலையில், 7 நீதிபதிகளும் நேற்று முன்தினம் கையெழுத்திட்ட விரிவான தீர்ப்பு, சுப்ரீம் கோர்ட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில், நீதிபதிகள் கூறி இருப்பதாவது:–

நீதிபதி கர்ணன் மீதான வழக்கு துரதிருஷ்டவசமானது. இது, பணியில் உள்ள நீதிபதிக்கு எதிரான நடவடிக்கை என்பதால், உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது. எங்கள் முடிவை எவ்வித அச்சமோ, விருப்பமோ, தீய எண்ணமோ இல்லாமல் பதிவு செய்கிறோம்.

நீதிபதி கர்ணனுடன் பேசிய மனநல மருத்துவர்கள், எவ்வித அறிக்கையும் சமர்ப்பிக்கவில்லை. கர்ணனின் மனநிலையில் குறைபாடு இருந்திருந்தால், எங்களிடம் தெரிவித்து இருப்பார்கள். அவர்கள் எதுவும் கூறாததால், நீதிபதி கர்ணன் கூறியபடி, அவர் நல்ல மனநிலையுடனும், உடல்நிலையுடனும் இருப்பதாக ஏற்றுக்கொள்கிறோம்.

நீதிபதி கர்ணனின் விரும்பத்தகாத செயல்களும், நடத்தையுமே அவருக்கு தண்டனை விதிக்க காரணம். அவரது பேச்சுகள், நீதித்துறையை நகைப்புக்கு இடமாக்கி விட்டது.

இந்த கோர்ட்டு அவ்வப்போது பிறப்பித்த உத்தரவுகளை தொடர்ந்து, அவரது நடத்தை வலிந்து சண்டைக்கு வருவது போல் இருந்தது.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.


Next Story