பிரதமர் மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பை நாங்கள் கேட்கவில்லை இந்தியா சீனாவிற்கு பதில்
பிரதமர் மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பிற்கு நாங்கள் கோரிக்கை விடுக்கவில்லை என சீனாவிற்கு இந்தியா பதிலளித்து உள்ளது.
புதுடெல்லி,
சிக்கிம் செக்டாரில் சீன ராணுவம் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியதால் பதட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
எல்லையில் நிலைமை மேலும் மோசம் அடைவதற்குள் இந்திய படைகள் எங்களது எல்லையை விட்டு வெளியேறவேண்டும் என முன்நிபந்தனை விதிக்கிறோம் என சீனா கூறிவருகிறது. 1962 விளைவுகளை விட மோசமான விளைவை ஏற்படுத்துவோம் என சீன அரசு மீடியா செய்தி வெளியிட்டு வருகிறது.
இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஜி-20 அமைப்பின் 2 நாள் மாநாடு, ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. சிக்கிம் செக்டார் பிரச்சனையை தீர்த்துக் கொள்ள இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம் என தகவல்கள் வெளியாகியது. ஜி-20 மாநாடு ஹாம்பர்க் நகரில் நாளை தொடங்க உள்ள நிலையில் சீன வெளியுறவுத்துறை அதிகாரி பேசுகையில், “ அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் மோடி இடையே இரதரப்பு சந்திப்பிற்கு சூழ்நிலை சரியாக இல்லை” என கூறிஉள்ளார்.
இந்நிலையில் பிரதமர் மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பிற்கு நாங்கள் கோரிக்கை விடுக்கவில்லை என சீனாவிற்கு இந்தியா பதிலளித்து உள்ளது.
பிரதமர் மோடியுடன் இஸ்ரேல் சென்று உள்ள இந்திய அதிகாரி பேசுகையில், “எந்தஒரு சந்திப்பையும் நாங்கள் கேட்கவில்லை, இப்படியிருக்கையில் உகந்த சூழல் மற்றும் உகந்த சூழல் இல்லாதது தொடர்பான கேள்விக்கு இடமில்லை,” என கூறிஉள்ளார் என இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது.
Related Tags :
Next Story