பெங்களூருவில் மெட்ரோ ரயில் ஊழியர்கள் போராட்டம்: பயணிகள் தவிப்பு

பெங்களூருவில் இன்று அதிகாலை முதல் மெட்ரோ ரயில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ரயில் சேவைகள் முடங்கியுள்ளது.
பெங்களூரு,
பெங்களூருவில் நேற்று மெட்ரோ ரயில் ஊழியர்களை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல்துறையினர் தாக்கியதாக புகார் எழுந்தது. இதன் தொடர்ச்சியாக மெட்ரோ ரயில்கள் ஊழியர்களுக்கும் காவல்துறையினருக்கும் மோதல் நடைபெற்றது. இதையடுத்து, 6 பேரை பெங்களூரு போலீசார் கைது செய்தனர். அவர்களில் 4 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும் ஏனைய இரண்டு ஊழியர்களையும் விடுவிக்க வேண்டும் என கோரி பெங்களூரு மெட்ரோ ரயில் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அதிகாலை 5 மணி முதல் மெட்ரோ ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் பணியிடங்களுக்கும் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். தொடர்ந்து மெட்ரோ ரயில் பணியாளர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
Related Tags :
Next Story






