7 மணி நேரத்திற்கு பிறகு பெங்களுரூவில் மெட்ரோ ரயில்கள் மீண்டும் இயக்கம்
பெங்களூருவில் மெட்ரோ ரயில் ஊழியர்கள் போராட்டம் காரணமாக தடைபட்டு இருந்த மெட்ரோ ரயில்கள் சேவை மீண்டும் துவங்கியது.
பெங்களூரு,
பெங்களூரில் மெட்ரோ ரெயில் நிலையங்களில் கர்நாடக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று இங்குள்ள ஒரு மெட்ரோ ரெயில் நிலையத்தில் ஊழியர்களுக்கும் போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டது.ஒருவரையொருவர் பலமாக தாக்கிக் கொண்டு அடிதடியில் ஈடுபட்டனர். இதில் இருதரப்பிலும் பலர் காயம் அடைந்தனர். உடனே போலீசார் விரைந்து சென்று சமாதானப்படுத்தினார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசாரை தாக்கியதாக மெட்ரோ ரெயில் ஊழியர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் கர்நாடக போலீஸ் தரப்பில் 2 பேர் கைது செய்யப்பட்டார்கள்.அதன்பிறகு கைதான 6 ஊழியர்களில் 4 பேர் விடுதலை செய்யப்பட்டனர். மற்றவர்களை விடுதலை செய்ய மறுத்துவிட்டனர். இந்த சம்பவம் மெட்ரோ ரெயில் ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீசாரின் நடவடிக்கையை கண்டித்தும் மற்ற 2 ஊழியர்களை விடுதலை செய்யக்கோரியும் போராட்டத்தில் ஈடுபடுவது என மெட்ரோ ரெயில் ஊழியர்கள் முடிவு செய்தனர். இதன்படி இன்று காலை 5 மணி முதல் மெட்ரோ ரெயில்கள் ஓடவில்லை. மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு வந்த பயணிகள் மெட்ரோ ரெயில்கள் ஓடாததால் அலுவலகங்களுக்கு செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.
போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், மெட்ரோ ஊழியர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் 7 மணி நேரமாக தடைப்பட்டிருந்த ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது.
Related Tags :
Next Story