இந்திய - பாகிஸ்தான் எல்லையை திறப்பது பஞ்சாப்பிற்கு உதவி செய்யும் - அமரிந்தர் சிங்


இந்திய - பாகிஸ்தான் எல்லையை திறப்பது பஞ்சாப்பிற்கு உதவி செய்யும் - அமரிந்தர் சிங்
x
தினத்தந்தி 8 July 2017 4:40 AM IST (Updated: 8 July 2017 4:40 AM IST)
t-max-icont-min-icon

இந்திய - பாகிஸ்தான் எல்லையை திறப்பது பஞ்சாப் மாநிலத்திற்கு உதவிகரமாக இருக்கும் என்று மாநில முதல்வர் அமரிந்தர் சிங் கூறினார்.

புதுடெல்லி

என்றாவது ஒருநாள் இரவு உணவை லாகூரிலும் (பாகிஸ்தான்), மதிய உணவை அம்ரித்சரிலும் (இந்தியா) உண்பது உண்மையாகும் என்றார் அம்ரிந்தர் சிங். 

அவர் மேலும் பேசுகையில் ஜி எஸ் டியால் மாநிலத்திற்கு ரூ 5000-6000 கோடி கூடுதலாக கிடைக்கும் என்றார், காங்கிரஸ் ஆட்சியில் திட்டமிட்டபடி இரண்டு அடுக்குகளாக இல்லாமல் ஐந்து அடுக்களாக இருப்பதையே காங்கிரஸ் எதிர்ப்பதாகவும், அதே போல அதிகபட்ச வரி இப்போது 48% இருப்பது போல் இல்லாமல் 18%மாக இருப்பதையே கட்சி விரும்பியதாகவும் தெரிவித்தார்.

கனடா நாட்டுப் பிரதமர் துருதுவோ பஞ்சாப் வருவதில் தனக்கு ஆட்சேபணை இல்லையென்றும் தெரிவித்தார். மத்திய அரசின் உதவி இல்லாமல் ரூ. 69,000 கோடி விவசாயக் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய இயலாது என்றும் அவர் கூறினார். மாநில நிதி நிலையை மீண்டும் சரியான நிலைக்கு கொண்டு வருவதில் உறுதியாக அரசு இருக்கிறது என்றும் முதல் 100 நாட்களில் 33% வருவாயை பெருக்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.


Next Story