பர்ஹான் வானி நினைவு தினம்: காஷ்மீரில் சில இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு
பர்ஹான் வானி நினைவு தினத்தை முன்னிட்டு காஷ்மீரில் சில இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்,
ஹிஸ்புல் முஜாகீதின் இயக்க தளபதி பர்ஹான் வானி கடந்த ஜூலை 8 ஆம் தேதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்திற்கு பிறகு காஷ்மீரில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. இதனால், தற்போது வரை சில இடங்களில் இயல்பு நிலை திரும்பவில்லை.
இந்த நிலையில், பர்ஹான் வானி சுட்டுக்கொல்லப்பட்ட ஓராண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரில் டிரால் உள்ளிட்ட 3 இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் பள்ளத்தாக்கு பகுதி முழுவதும் மக்கள் நடமாட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பர்ஹான் வானி நினைவாக நினைவு ஊர்வலம் நடத்த பிரிவினைவாதிகள் திட்டமிட்டு இருப்பதால், இதை சீர்குலைக்க பாதுகாப்பு படையினர் இத்தகய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
காஷ்மீரில் எத்தகைய பாதுகாப்பு சவால்களையும் சமாளிக்கும் வகையில், பாதுகாப்பு படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பர்ஹான் வானியின் சொந்த ஊரான டிராலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடைகள், தொழில்துறை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story