அகமதாபாத் உலக பாரம்பரிய நகரமாக யுனோஸ்கோ அறிவிப்பு பிரதமர் மோடி வரவேற்பு


அகமதாபாத் உலக பாரம்பரிய நகரமாக யுனோஸ்கோ அறிவிப்பு பிரதமர் மோடி வரவேற்பு
x
தினத்தந்தி 9 July 2017 3:07 PM IST (Updated: 9 July 2017 3:06 PM IST)
t-max-icont-min-icon

அகமதாபாத் உலக பாரம்பரிய நகரமாக யுனோஸ்காவால் அறிவிப்புக்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

புதுடெல்லி,

குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத், உலக பாரம்பரிய நகரமாக யுனோஸ்கோவால் அறிவிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத் நகரம் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த நகரம்.  அகமது ஷா என்ற மன்னரால் கோட்டை நகரமாக அமைக்கப்பட்டது. மகாத்மா காந்தி சுதந்திரத்திற்கான போராட்டம் துவங்கியது அகமதாபாத்.  மகாத்மா காந்தி அகமதாபாத்தில் வாழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு  மேலாக  அகமதாபாத்தை உலகப் பாரம்பரிய நகரங்களின் பட்டியலில் சேர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்த நிலையில் யுனோஸ்காவின் உலக பாரம்பரிய நகரங்களை தேர்வு செய்வதற்கான கூட்டம் போலாந்தில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரம் உலகப் பாரம்பரிய நகரமாக அறிவிக்கப்பட்டது.

அகமதாபாத் நகரம் உலகப் பாரம்பரிய நகரமாக  யுனெஸ்கோவால்  அறிவிக்கப்பட்டதற்கு  பிரதமர் மோடி  மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும், அதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலேயே முதல் முறையாக அகமதாபாத், உலகப் பாரம்பரிய நகரமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
1 More update

Next Story