டெல்லியில் வெளிநாட்டினர் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதிதிட்டம் உளவுத்துறை எச்சரிக்கை
டெல்லியில் வெளிநாட்டினர் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதிதிட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுடெல்லி,
இது குறித்து டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தரப்பில் கூறியிருப்பதாவது:
டெல்லியில் உள்ள ஹாஜ் கஸ் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த சதிதிட்டம் தீட்டியுள்ளனர். உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உணவகங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள், உள்ளிட்டவை விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரகசிய கண்காணிப்பு கேமரா மூலம் தீவிரமாக கண்கானிக்க வேண்டும். சந்தேகம்படும் படியான நபர் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கண்காணிப்பிற்காக சிறப்பு படை பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டினர் அதிகம் வந்து செல்லும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகள், இங்கு இருக்கும் ஸ்லீப்பர் செல்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர். டெல்லியில் வசந்த் குன்ஜ் பகுதியில் உள்ள வணிகவளாகத்திலும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாகவும் அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டினர் பாதுகாப்பாக இருக்கும் படி டெல்லி போலீஸ் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story