இந்திய பங்கு சந்தையில் சென்செக்ஸ் 31,595 புள்ளிகளை தொட்டு வரலாற்று சாதனை
இந்திய பங்கு சந்தையில் சென்செக்ஸ் இன்று 235 புள்ளிகள் அதிகரித்து வரலாற்று சாதனையாக 31,595 புள்ளிகளை தொட்டுள்ளது.
சென்செக்ஸ் இதற்கு முந்தைய வர்த்தகத்தில் 31,360 புள்ளிகளாக முடிந்து இருந்தது. சென்செக்ஸ் இன்று உச்சத்தை எட்டியுள்ளது. வரும் 13ஆம் தேதி, டிசிஎஸ் நிறுவனத்தின் காலாண்டு வர்த்தக முடிவுகள் வெளியாகிறது.
இன்று வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்தில் சென்செக்ஸ் 235 புள்ளிகள் அதிகரித்து 31,595 புள்ளிகளைத் தொட்டது. இதற்கு முன்பு கடந்த ஜூன் மாதம் அதிகபட்சமாக சென்செக்ஸ் 31,522 புள்ளிகளை தொட்டு இருந்தது. தொழில்நுட்பம், ஐடி, ரியல் எஸ்டேட், பொதுத்துறை நிறுவனங்கள், சுகாதாரம் மற்றும் வங்கி தொடர்பான பங்குகள் இன்று அதிகரித்து காணப்பட்டது.
பாரதி ஏர்டெல், டிசிஎஸ், லூபின், சன் பார்மா, விப்ரோ ஆகிவற்றின் பங்குகள் இன்று சுமார் 3.73 சதவீத உயர்வைப் பெற்று இருந்தது.
இந்தியப் பங்குச் சந்தையைப் போல ஹாங்காங் மற்றும் ஜப்பான் ஆகியவற்றின் பங்குச் சந்தையும் இன்று லாபத்தில் இயங்கின.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சிறிது நேரம் இன்று காலை நிப்டி வர்த்தகம் நடைபெறவில்லை. சரி செய்யப்பட்டு காலை 11.45 மணிக்கு துவங்கியது.

Related Tags :
Next Story