காஷ்மீரில் லஷ்கர் பயங்கரவாதிகளுக்கு தீவிரமாக பணியாற்றிய உ.பி. கிரிமினல் கைது - போலீஸ்
காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளுக்கு தீவிரமாக பணியாற்றிய உ.பி. கிரிமினலை அம்மாநில போலீஸ் கைது செய்து உள்ளது.
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் இந்தியன் முஜாகிதீன் போன்ற பயங்கரவாத இயக்கங்கள் பாதுகாப்பு படைகளை குறிவைத்து தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது. பயங்கரவாத இயக்கங்கள் வங்கி, ஏடிஎம் கொள்ளைகளிலும் ஈடுபட்டு வருகிறது.
காஷ்மீரில் பயங்கரவாத இயக்கத்திற்கு தீவிரமாக பணியாற்றிய உத்தரபிரதேச மாநில கிரிமினலை போலீஸ் கைது செய்து உள்ளது. கைது மூலம் பல பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைக்க பெற்று உள்ளது. காஷ்மீர் ஐஜிபி முனிர் கான் செய்தியாளர்களிடம் பேசுகையில், காஷ்மீரில் தொடர்ச்சினான கிரிமினல் மற்றும் பயங்கரவாத குற்றங்களில் ஈடுபட்ட லஷ்கர்-இ-தொய்பா பயக்கரவாத செயல்பாட்டை உடைத்து உள்ளோம் என்றார். மேலும் அவர் பேசுகையில்,
தெற்கு காஷ்மீரின் குல்காமில் உத்தரபிரதேச மாநில முசாப்பர்நகரை சேர்ந்த சந்தீப் குமார் சர்மா என்ற அடில் மற்றும் முனீப் ஷா என இருவரை கைது செய்தோம். வங்கி மற்றும் ஏடிஎம் கொள்ளைகள் தொடர்பான விசாரணையில் பயங்கரவாத இயக்க செயல்பாட்டின் புதுவடிவம் தெரியவந்தது. விசாரணையானது பயங்கரவாத இயக்கத்தில் கிரிமினல்கள் வங்கி கொள்ளையில் ஈடுபட்டது தெரிவித்து உள்ளது. அவர்கள் லஷ்கர் - இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தால் பயன்படுத்தப்பட்டு உள்ளனர்.
விசாரணையில் அவர்கள் கொள்ளையடித்தது மற்றும் பயங்கரவாத இயக்கத்திற்கு பணம் வழங்கியது தெரியவந்தது. ஜூலை ஒன்றாம் தேதி நடந்த என்கவுண்டரில் பயங்கரவாதி பாஷிர் லாஷ்காரி கொல்லப்பட்டான், அப்போது சந்தீப் சிக்கினான். அவனை கைது செய்தது ஷாவையும் சிக்க வைத்தது. என்கவுண்டர் நடைபெற்ற போது நாங்கள் சந்தீப்பை கைது செய்தோம். பெரும் சந்தேகத்திற்கு இடையே அவனை கைது செய்தோம். உள்ளூரை சேராத ஒருவர் எப்படி பயங்கரவாத இயக்கத்தின் கமாண்டராக செயல்பட்ட பாஷிர் இருந்த வீட்டில் தங்கியிருந்தது எப்படி என எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விசாரணையின் போது 2012-ம் ஆண்டு சந்தீப் பள்ளத்தாக்கு பகுதிக்கு வந்தது தெரியவந்தது. பயங்கரவாத இயக்கத்திற்கு பண ஏற்பாடு செய்துக் கொடுக்க பணியாற்றி உள்ளான். குளிர்காலம் வந்ததும் பாட்டியாலாவிற்கு சென்றுவிடுவதையும் வழக்கமாக கொண்டிருந்து உள்ளான். பஞ்சாப்பில் பணியாற்றிய போது ஷாகித் அகமதுவுடன் அவனுக்கு தொடர்பு ஏற்பட்டு உள்ளது. குல்காமை சேர்ந்த ஷாகித் அகமதுவுடன் மீண்டும் காஷ்மீருக்கு சென்று வங்கிகள், ஏடிஎம்களை கொள்ளையடிக்க திட்டமிட்டு உள்ளனர்.
கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர். சந்தீப், முனீப் ஷா, ஷாகித் அகமது மற்றும் முசாப்பர் அகமது ஆகியோர் குல்காமில் தங்கியிருந்து கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டு உள்ளனர். இவர்கள் லஷ்கர் பயங்கரவாத இயக்கத்திற்கு பண ஏற்பாடு செய்து கொடுக்க தீவிரமாக செயல்பட்டு உள்ளனர். லஷ்கர் பயங்கரவாத இயக்கமும் அவர்களை வங்கி, ஏடிஎம் கொள்ளைக்கு பயண்படுத்தி உள்ளது என தெரிவித்து உள்ளார். தெற்கு காஷ்மீரில் கடந்த 16-ம் தேதி வங்கி கொள்ளையின் போது போலீஸ் அதிகாரி உள்பட 6 போலீசார் கொல்லப்பட்ட சம்பவத்தில் இவர்களுக்கு தொடர்பு உள்ளது என போலீஸ் தரப்பு தகவல்கள் தெரிவித்து உள்ளன.
Related Tags :
Next Story