திருமணத்தில் மணமகனை துப்பாக்கி முனையில் கடத்தி திருமணம் செய்த ரிவால்வர் ராணி


திருமணத்தில் மணமகனை துப்பாக்கி முனையில் கடத்தி திருமணம் செய்த  ரிவால்வர் ராணி
x
தினத்தந்தி 10 July 2017 4:05 PM IST (Updated: 10 July 2017 4:04 PM IST)
t-max-icont-min-icon

திருமணத்தில் மணமகனை துப்பாக்கி முனையில் கடத்தி உ.பி.,யை சேர்ந்த பெண், அந்த நபரையே திருமணம் செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.


கான்பூர்
உத்தரபிரதேசம், ஹமிபூர் மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் வர்ஷா சாஹு அகா, 27. இவர் அசோக் யாதவ் என்பவரை எட்டு ஆண்டுகளாக காதலித்து வந்தார். இதில் அசோக் யாதவ் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த மே, 15ம் தேதி அசோக் யாவிற்கும், வேறு ஒரு பாரதி யாதவ் என்ற பெண்ணுக்கும் பந்தல்கண்ட் மாவட்டத்தில் உள்ள மவ்தாகா என்ற இடத்தில் திருமணம் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விஷயத்தை கேள்விபட்ட உடன் கடும் கோபம் அடைந்த வர்ஷா  2 நபர்களுடன் உடனடியாக திருமணம் நடக்க இருந்த இடத்திற்கு சென்று, அசோக் யாதவ் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டினார். மேலும், துப்பாக்கி முனையில் அசோக் யாதவை காரில் கடத்தியும் சென்றார்.

திருமணம் நடக்க இருந்த பெண்ணின் தந்தையான லாலு யாதவ் என்பவர் இது குறித்து போலீசில் புகார் செய்தார். தன் பெண்ணை திருமணம் செய்ய மறுத்து விட்டு அசோக் யாதவ் ஓடி விட்டதாக புகார் அளித்தார். போலீசார் இரண்டு நாட்களாக தீவிரமாக தேடி, அசோக் யாதவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மாப்பிள்ளையை துப்பாக்கி முனையில் கடத்திய வர்ஷா உ.பி., மாநிலம் முழுவதும் பிரபலமடைந்தார். அவரை, 'ரிவால்வர் ராணி' என்றே மக்கள் அழைத்தனர். ஆனால், இந்த சம்பவத்தில், அசோக் யாதவ் குடும்பத்தினர் அவரை கை கழுவி விட்டனர். அவரை ஜாமினில் எடுக்க கூட முயற்சிக்கவில்லை. வர்ஷா தான் அதற்கு முயற்சி செய்து, அசோக் யாதவ் கடந்த, 7 ம் தேதி சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தார். இவர்கள் இருவருக்கும் ஹமிபூர் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் சிவசேனா செய்து இருந்தது. இதுதவிர ஆண்களால் ஏமாற்றப்படும் பெண்களை காப்பாற்ற வர்ஷா தலைமையில் ஒரு என்.ஜி.ஓ., அமைப்பும் துவக்கப்படும் என சிவசேனா அறிவித்துள்ளது.

Next Story