ஐ எஸ்சால் பிணைக்கைதிகளாக இருந்த 39 இந்தியர் கதி என்ன?


ஐ எஸ்சால் பிணைக்கைதிகளாக இருந்த 39 இந்தியர் கதி என்ன?
x
தினத்தந்தி 10 July 2017 6:54 PM IST (Updated: 10 July 2017 6:53 PM IST)
t-max-icont-min-icon

மோசூல் நகரில் ஐஎஸ் இயக்கத்தால் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த 39 இந்தியர் கதி என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

சண்டிகர்

சிக்கிக்கொண்ட 39 பேரில் பெரும்பாலோர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இது குறித்து அம்மாநில முதல்வர் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாவுடன் இது குறித்து தொலைபேசியில் இன்று பேசினார்.

மத்திய அரசும் பல்வேறு வழிகளில் இந்தியர்களை கண்டுபிடித்து இந்தியா அழைத்துவர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.

கட்டட வேலைக்குச் சென்ற இவர்கள் 2014 ஆம் ஆண்டு முதல் பிணைக்கைதிகளாக இருந்துள்ளனர். மோசூல் நகரம் ஐஎஸ் பிடியில் இப்போது இல்லை என்பதால் 39 பேரும் இந்தியா திரும்புவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இவர்களை கடைசியாக தேவாலயம் ஒன்றில் மறைந்திருந்தப் போது சிலர் கண்டுள்ளனர். 

பாதுகாப்புத் துறை இணையமைச்சர் தளபதி வி கே சிங் ஈராக் சென்றுள்ளார். அவர் 39 பேரையும் அழைத்து வருவார் என்று நம்பப்படுகிறது.


Next Story