சானிட்டரி நாப்கினுக்கு 12 சதவீத ஜி.எஸ்.டி. வரி


சானிட்டரி நாப்கினுக்கு 12 சதவீத ஜி.எஸ்.டி. வரி
x
தினத்தந்தி 11 July 2017 4:59 AM IST (Updated: 11 July 2017 4:59 AM IST)
t-max-icont-min-icon

சானிட்டரி நாப்கினுக்கு ஜி.எஸ்.டி. நடைமுறையில் 12 சதவீத வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது

புதுடெல்லி

சானிட்டரி நாப்கினுக்கு ஜி.எஸ்.டி. நடைமுறையில் 12 சதவீத வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பு, அதன் மீது 5 சதவீத உற்பத்தி வரி, 6 சதவீத மதிப்பு கூட்டு வரி மற்றும் கூடுதல் வரிகள் சேர்த்து, 13.7 சதவீத வரி விதிக்கப்பட்டு வந்தது. ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்த பிறகு, 12 சதவீதமாக வரி விகிதம் குறைந்துள்ளது.

இருப்பினும், நாப்கின் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுவதால், உற்பத்தியாளர்களுக்கு ஏற்படும் இழப்பை மத்திய அரசு ஈடுகட்டும் என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாப்கினுக்கான வரியை பூஜ்ய சதவீதமாக குறைக்க முடியாது என்றும் மறுத்துள்ளது.

மேலும், ஒரு நிறுவனம் தனது ஊழியருக்கு ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம்வரை மதிப்புடைய பரிசுகளை கொடுப்பது, ஜி.எஸ்.டி. வரிவிதிப்பின் கீழ் வராது என்றும், ரூ.50 ஆயிரத்துக்கு மேல் மதிப்புடைய பரிசுகளை வழங்கினால், ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படும் என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தி உள்ளது.


Next Story