பெரும்பான்மையை நிரூபிக்க நாகாலாந்து முதல்–மந்திரிக்கு கவர்னர் கெடு
நாகாலாந்தில் நாகா மக்கள் முன்னணி தலைமையிலான ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்து வந்தது.
கொகிமா,
நாகாலாந்தில் நாகா மக்கள் முன்னணி தலைமையிலான ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. இந்த கூட்டணியில் நாகா மக்கள் முன்னணி எம்.எல்.ஏ.க்கள் 46 பேரும், பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் 4 பேரும், 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் இருந்தனர். இவர்களில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் தவிர மற்ற 49 எம்.எல்.ஏ.க்களும் எதிர்ப்பு தெரிவித்ததால் முதல்–மந்திரி பதவியை ஜெலியாங் பிப்ரவரி 22–ந் தேதி ராஜினாமா செய்தார். அதன்பின்னர் எம்.எல்.ஏ. ஆக இல்லாத, நாகா மக்கள் முன்னணி கட்சியின் மூத்த தலைவர் சுர்கோசெலி லீசீட்சு புதிய முதல்–மந்திரியாக பதவி ஏற்றார்.
இந்நிலையில் தனக்கு 41 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாகவும், தன்னை முதல்–மந்திரியாக பதவி ஏற்க அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் கவர்னர் பி.பி.ஆச்சார்யாவிடம், முன்னாள் முதல்–மந்திரி ஜெலியாங் மனு அளித்தார். இதையடுத்து முதல்–மந்திரி சுர்கோசெலி லீசீட்சு சட்டசபையில் 15–ந் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் ஆச்சார்யா கெடு விதித்து உள்ளார்.
தற்போது காலியாக இருக்கும் வடக்கு அங்காமி தொகுதிக்கு 29–ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிட முதல்–மந்திரி சுர்கோசெலி லீசீட்சு நேற்று மனுதாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story