அமர்நாத் தாக்குதலுக்கு காரணமான அபு இஸ்மாயிலை தீவிரமாக தேடும் பாதுகாப்பு படை


அமர்நாத் தாக்குதலுக்கு காரணமான  அபு இஸ்மாயிலை தீவிரமாக தேடும் பாதுகாப்பு படை
x
தினத்தந்தி 12 July 2017 12:40 PM IST (Updated: 12 July 2017 12:39 PM IST)
t-max-icont-min-icon

அமர்நாத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி அபு இஸ்மாயிலை பிடிக்க பாதுகாப்பு படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள அமர்நாத் குகைக்கோவிலில் பனி லிங்கத்தை தரிசிக்க பஸ்சில் சென்ற பக்தர்கள் மீது நேற்று முன்தினம் இரவு பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 5 பெண்கள் உள்பட 7 பக்தர்கள் இறந்தனர்.

 21 பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு ஆளானவர்கள் குஜராத் மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் என தற்போது தெரியவந்து உள்ளது. இச்சம்பவத்துக்கு லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள் காரணம் என்று காஷ்மீர் போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த பாகிஸ்தான் பயங்கரவாதி இஸ்மாயில் என  தெரியவந்து இருக்கிறது. இதையடுத்து, அபு இஸ்மாயிலை பிடிக்கும் முயற்சியில்  தீவிரமாக பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். 

குறிப்பாக தெற்கு காஷ்மீரில் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.  கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வந்த அபு இஸ்மாயில் ஓராண்டுக்கு முன்பே தெற்கு காஷ்மீரில் தனது தளத்தை உருவாக்கியதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story