சட்டவிரோத பணபரிமாற்றம்: லாலு பிரசாத் யாதவின் மருமகன் அமலாக்கத்துறை முன்பு ஆஜர்
8 ஆயிரம் கோடி சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பான வழக்கில் லாலு பிரசாத் யாதவின் மருமகன் அமலாக்கத்துறை முன்பு இன்று ஆஜரானார்.
புதுடெல்லி,
ஊழல் வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி தலைவரும், முன்னாள் முதல்–மந்திரியுமான லாலுபிரசாத் யாதவ் குடும்பத்தினருக்கு சொந்தமான 12 இடங்களில் சமீபத்தில் சி.பி.ஐ. போலீசார் சோதனை நடத்தினார்கள். இதன் தொடர்ச்சியாக லாலுபிரசாத் மகளும் டெல்லி மேல்–சபை எம்.பியுமான மிசா பாரதி மற்றும் அவரது கணவரான சைலேஷ்குமார் ஆகியோருக்கு சொந்தமான டெல்லியில் உள்ள பண்ணை வீடு மற்றும் ஒருநிறுவனத்திலும் கடந்த 8–ந்தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
இதில் ரூ.8 ஆயிரம் கோடிக்கு பண மோசடி நடந்தது தெரியவந்தது.இதைத்தொடர்ந்து அமலாக்கத்துறை முன்பு நிதி பரிமாற்றம் ஆவணங்களுடன் மிசா பராதி மற்றும் அவரது கணவர் சைலேஷ் குமார் நேற்று ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.

அதன்படி லாலுபிரசாத் மகள் மிசாபாரதி நேற்று காலை 11 மணி அளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜர் ஆனார். அவரிடம் 8 மணிநேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
நேற்று அமலாக்கத்துறை முன்பு ஆஜராகாத மிசா பாரதியின் கணவர் சைலேஷ்குமார் இன்று ஆஜராகியுள்ளார். சைலேஷ் குமாரிடம் மிசாலி பிரிண்டர்ஸ், பேக்கர்ஸ் பிரைவேட் லிமிட்டெடு ஆகிய நிறுவனங்களுடனான நிதி பரிமாற்றங்கள் குறித்து விசரணை நடத்தப்பட உள்ளதாக அமலாக்கத்துறை வட்டார தகவல்கள் கூறுகின்றன.

Related Tags :
Next Story