3 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு இயக்குநர் பதவியை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்


3 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு இயக்குநர் பதவியை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
x
தினத்தந்தி 12 July 2017 5:11 PM IST (Updated: 12 July 2017 5:11 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் அமையவுள்ள 3 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு இயக்குநர் பதவியை உருவாக்குவதற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

புதுடெல்லி,

மத்திய நிதி மந்திரி கடந்த 2014-15ம் ஆண்டிற்கான பட்ஜெட் உரையில், ஆந்திர பிரதேசம், மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் 4 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்து ஆந்திர பிரதேசத்தில் உள்ள மங்களகிரி, மேற்கு வங்காளத்தில் உள்ள கல்யாணி மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூர் ஆகிய 3 பகுதிகளில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபரில் வழங்கப்பட்டது.  இதற்கு ரூ.4,949 கோடி செலவிடப்படும்.

இந்நிலையில், இந்த 3 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கும் 3 புதிய இயக்குநர் பதவிகளை உருவாக்குவதற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

அவற்றை அமைப்பதற்கான விரிவான பெருந்திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது.  பிற விரிவான வடிவமைப்புகளை உருவாக்கும் பணிகள் நடந்து வருகின்றன.


Next Story